வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கம்பெனியில் தங்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நாயக் என்பவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான பாபு நாயக் திடீரென வயிறு வலியால் அலறி துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது மது அருந்திய போது கழிவறையில் இருந்த கிளீனரை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்ததாக பாபு தெரிவித்துள்ளார். பின்னர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.