Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரைத் தேடி நடந்து செல்கிறார் ஸ்டாலின்” – அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை நீர் தேங்கி நாளும், அவை உடனுக்குடன் வடிந்து விட்டன என்றும், தண்ணீரை தேடி ஸ்டாலின் நடந்து செல்வதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் புயல் கரையை கடந்த போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 100 சதவீத மக்கள் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக கூறினார். புயல் பாதிப்பால் 26 கால்நடை உயிரிழந்ததாகவும், 89 குடிசை வீடு, 12 ஓட்டு வீடு என 101 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

பயிர் சேதம் குறித்த ஆய்வுக்கு பின் உரிய நிவாரணங்களை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். 5 ஆயிரம் முகம் தயார் நிலையில் இருந்த போதும், 3 ஆயிரத்து 85 முகாம்களில் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் தங்க வைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறினார்.

கன மழையால் சென்னையில் சில இடங்களில் மழை நீர் தேங்கினால் கூட அவை உடனுக்குடன் வடிந்து விட்டன என்றும், இதற்கு முதலமைச்சர் எடுத்த சிறப்பான நடவடிக்கைகளே காரணம் என்றும், சென்னையில் தண்ணீர் இல்லாததால் தண்ணீரை தேடி திமுக தலைவர் ஸ்டாலின் பல இடங்களுக்கு நடந்து சென்று கொண்டிருப்பதாகவும் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்தார்.

Categories

Tech |