Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு… நான் நடுநிலையை காப்பி அடிக்கவில்லை… கமல் விமர்சனம்…!!!

தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தனது கொள்கையை வெளியே சொன்னால் சிலர் அதை காப்பி அடித்து விடுவார்கள் என்பதால் வெளியில் சொல்லவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தவிர அரசியலில் தன்னை யாரும் இயக்கவில்லை. ஏற்கவும் முடியாது என்றும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். “நடுநிலை என்பதை நான் காப்பி அடிக்கவில்லை, அது என் முப்பாட்டன் வல்லவன் வழி, அதுவே என் வலி” என்று ரஜினியை பின்பற்றி தமிழ் டயலாக் பேசி உள்ளார். மேலும் வேலை செய்யாமல் ஊதியம் பெறுபவர்கள் சோம்பேறி என்றால் ஆட்சியில் இருப்பவர்களும் சோம்பேறியாக உள்ளனர். குற்ற உணர்வுடன் தற்போது தேர்தலுக்கு வந்துள்ளேன். முன்பே தவறை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசே இல்லை என்று கடுமையாக கமல் விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |