Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. எளிய வழிமுறைகள் இதோ…. பயிற்சியில் விவசாயிகள்….!!!!

தண்ணீரின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனங்காட்டங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி கீழ் கொள்ளிடம் பாசன பகுதி விவசாயிகளுக்கு சில பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நெற்பயிரில் நீர் மறைய நீர் கட்டுதல், ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியானது உளவியல் இணை பேராசிரியர் இளமதி மேற்பார்வையில் நடைபெற்றது.

மேலும் இதில் கலந்துகொண்ட இணை பேராசிரியர் நாகேஸ்வரி கூறியதாவது “தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெற் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நெல் சாகுபடி செய்யும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். மேலும் ஒரு ஏக்கர் நிலத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை முறையாகவும் சிக்கனமாகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பயிர் செய்தால் நான்கு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யலாம்.

அதுமட்டுமில்லாமல் நெற்பயிரில் உள்ள களைகளை அளிக்க நீரின் அளவு, காலம், நேரம் மற்றும் களைக்கொல்லியின் அளவு ஆகியவற்றை முக்கியமானதாக கருத வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தண்ணீரின் அளவு நெற்பயிரில் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Categories

Tech |