Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தண்ணீரை சுட வைத்த மூதாட்டி…. உடல் கருகி இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை…!!

சேலையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.குமார் லிங்காபுரத்தில் லட்சுமி அம்மாள்(95) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் இருந்த விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்ததால் மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |