Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரை முகத்தில் தெளித்த பெண்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் கமலம்மாள்(80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது கணவரின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஜோலார்பேட்டையில் இருக்கும் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய பெண் கமலம்மாவிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இதனை அடுத்து அந்தப் பெண் மூதாட்டியிடம் 400 ரூபாயை கொடுத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். பின்னர் மூதாட்டியின் முகத்தில் ஒரு டம்ளரில் இருந்த தண்ணீரை தெளித்தவுடன் கமலம்மாளுக்கு மயக்கம் ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்த மூதாட்டி தான் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகையை பறித்து சென்ற பெண்ணையும், கார் ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |