விவசாயியை சரமாரியாக தாக்கிய பெண் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் விவசாயியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி அமுதாவிற்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமுதா, சிவசக்தி, சாந்தி உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து ஜெயராமனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ஜெயராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அமுதா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.