Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் இல்லை…. உணவு இல்லை…. மின்சாரம் இல்லை…. எடப்பாடி தாருமாறு விமர்சனம் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக பல பகுதியில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே ஆங்காங்கே தண்ணீர் இன்னும் தேங்கி நின்று கொண்டிருக்கிறது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்க்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு விரைந்து செயல்பட்டு, எங்கெல்லாம் தாழ்வான பகுதி இருக்கின்றதோ அந்தப் பகுதியில் வெள்ளநீர் அதிகம் தேங்கி நிற்கின்றது, அந்தப் பகுதியில் ராட்சத மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்னும் தண்ணீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு குடிதண்ணீர் கிடைக்காமல் இருக்கின்றது மற்றும் உணவு கிடைக்காமல் இருக்கின்றது, மின்சாரம் தடைபட்டுள்ளது, குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் இருக்கின்றது, போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை. எனவே இந்த அரசு பாதிக்கப்பட்ட பகுதியில் விரைந்து செயல்பட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Categories

Tech |