Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வெள்ளைசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். பின்னர் வெள்ளைச்சாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |