Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க சென்ற மாடுகள்…. வனப்பகுதியில் நடந்த சம்பவம்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற மாடுகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள செம்மனஅள்ளி காந்தி நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது மூன்று மாடுகளை சென்றாய பெருமாள் கோவில் மலையடிவாரத்தில் இருக்கும் வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.

இதனை அடுத்து அங்குள்ள ஓடையில் தண்ணீர் குடிக்க சென்ற மூன்று மாடுகள் திடீரென பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்ததும் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டி சென்ற சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி விடுகின்றனர்.

Categories

Tech |