புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி சேர்ந்தவர் பொன்னையா. இவருக்கு சொந்தமான இடத்தில் மான் ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் வித்யா தலைமையிலான வனத்துறையினர் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த அந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இறந்த புள்ளிமான் செவலூர் செவிலிமலை அல்லது வார்பட்டு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு ஜிபிஎஸ் தொழிநுட்பத்துடன் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.