Categories
தேசிய செய்திகள்

“தண்ணீர் குடித்ததற்காக இப்படியா தாக்குவது”… பகீர் தகவலுடன் வைரலாகும் புகைப்படம்… உண்மை என்ன..?

கடும் காயத்துடன் தாக்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வந்தது. இதை குறித்து பார்ப்போம்.

சமீபத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் இந்து மத கோயிலுக்கு சென்று தண்ணீர் குடித்தாக இந்து மதத்தை சேர்ந்த நபர்கள் அவரை தாக்கியதாக பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் உடல் முழுக்க காயமடைந்த சிறுவனின் புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆசிப், தாகமாக இருந்தால் மசூதி, சர்ச், குருத்வாரா அல்லது ஓட்டலுக்கு சென்று தண்ணீர் குடித்திருக்கலாம்,’ என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த புகைப்படத்தை ஆய்வு செய்தபோது அது 2020ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பேஸ்புக்கில் பதிவேற்ற ஒரு புகைப்படம் என்பது கண்டறியப்பட்டது. அதுவும் ஒரு தந்தை மகன் சரியாக படிக்காத காரணத்தினால் கடுமையாக தாக்கியுள்ளார் என்ற தலைப்பில் பதிவாகி இருந்தது. அதை இதனுடன் இணைத்து சமூகவலைதளத்தில் யாரோ பதிவிட்டுள்ளனர். இதுபோன்ற போலி செய்திகளை பரப்பாதீர்கள் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |