ஈரோடு மாவட்டத்திலுள்ள காமையன்புரம் கிராமத்தில் விவசாயியான மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 7 ஆடுகள் மற்றும் 3 மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மல்லிகார்ஜுனா தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அந்த தண்ணீரை 5 ஆடுகள் மட்டும் குடித்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்த 5 ஆடுகளும் பரிதாபமாக இறந்துவிட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகார்ஜுனா கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் ஆடுகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் தண்ணீரில் யாராவது விஷம் கலந்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.