திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு ஒன்னேகால் வயதில் ஹரிஷ் என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தையானது தண்ணீர்பக்கெட்டுக்குள் கிடந்த சோப்பை எடுக்க குனிந்திருக்கிறது. அப்போது அது எட்டாததால் தலைகீழாக குழந்தை கவிழ்ந்துள்ளது. ஆனால் அதனை ஹரிஷ் குடும்பத்தினர் பார்க்காமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது குழந்தை ஹரிஷ் தண்ணீருக்குள் தலைகீழாக கவிழ்ந்துள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
உடனே ஹரிஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் பெற்றோர், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்துக்கு ஹரிஷ் உடலை எடுத்துசென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துவாக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.