Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

” தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ” சுரங்கத்தை மூடவேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…!!

பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. சில வருடங்களாக இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேற்றபடுகிறது. இந்த சுரங்கங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோவிந்தராஜ பட்டினம், ஓலைப்பாடி, காரைப்பாடி, வீரமாநல்லூர், வயலப்பாடி போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தபகுதி மக்கள் சுண்ணாம்புகல்   சுரங்கத்தை மூட வலியுறுத்தி அரசு பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்பிறகு  பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |