Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிக்க சென்ற பெண்கள்…. இருதரப்பினரின் மோதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டகொல்லை கிராமத்தில் பூமி தேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஆனந்தியும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தா என்ற பெண்ணும் தெருக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பூமி தேவன், அவரது மனைவி ஆனந்தி, உறவினர் ராமசாமி, அவரது மனைவி லட்சுமி, வசந்தா ஆகியோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் காயம் அடைந்த ஆனந்தியும், வசந்தாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |