மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மீனா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது மீனா மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.