மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சியில் சின்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய்க்கு திருமணமாகி மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் இருக்கிறது. நேற்று முன்தினம் சின்னியப்பன் தனது மனைவி, மருமகள், குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அப்போது விஜய் தோட்டத்தில் இருக்கும் தொட்டியில் மோட்டார் போட்டு தண்ணீரை நிரப்பி கொண்டிருந்தார்.
இதனையடுத்து ஸ்விட்ச் போர்டில் பொருத்தப்பட்ட பிளக்கை சரிசெய்து போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.