தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும்.
கேசர் குளி, தும்பல ஹல்லி மற்றும் பஞ்சப்பள்ளி போன்ற பல அணைகளை தன்னகத்தில் கொண்டுள்ளது இந்த பாலக்கோடு தொகுதி. 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது இதுவரை 11 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில்
8 முறை அதிமுக முறையும்,
2 முறை திமுகவும்,
ஒருமுறை காங்கிரஸ் வென்றுள்ளது
குறிப்பாக கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை அதிமுக பத்தாண்டுகளாக தொடர்ந்து வென்றுள்ளது. தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கே.பி.அன்பழகன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தர்மபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று பாலக்கோடு. 1967 ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி 1971 இல் இருந்து இதுவரை 11 தேர்தல்களை சந்தித்துள்ளது
பாலக்கோட்டில் மிகவும் பிரபலம் தக்காளி மார்க்கெட். இங்கிருந்து டன் கணக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல லட்சம் ரூபாய் அளவிற்கு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். தக்காளி ,தேங்காய் மற்றும் மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் இருந்து அதிகம் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இளநீர் செல்கிறது. தென்னை ஓலை ஈர்க்குச்சி துடைப்பம் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
பாலக்கோடு பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 100 டன் தக்காளிகள் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வருகின்றன. விலை வீழ்ச்சி காலங்களில் விலை வீழ்ச்சியை சமாளிக்கும் தீர்வை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அதிகப்படியான கரும்பு அரவை செய்யக்கூடிய ஆலை தான் இங்கு உள்ள மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆலை செயல்படுத்தப்படவில்லை.
அதற்கான காரணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் எங்கும் கரும்பு சாகுபடி செய்யப்படவில்லை. அங்கு விவசாயிகளுக்கு முறையான நீர் வசதி இல்லை , நீர்ப்பாசனத் திட்டமும் சரியாக செயல்படவில்லை. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சர்க்கரை ஆலையில் எந்த பணிகளும் நடைபெறாத நிலையில் உள்ளது. இதனால் நான்காயிரம் கரும்பு விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நாடிச் சென்றுள்ளனர். இப்போது பாலக்கோடு பகுதியில் இருந்து நகர கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்படுகின்றன.
அலியலாம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டி ஏரிக்கு நீர் கொண்டுவர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோள். எண்ணேகால் புதூரில் இருந்து தும்பல ஹல்லி அணைக்கு நீர் கொண்டுவர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் ஒரு பிரதான கோரிக்கையாகும். நீண்டகாலமாக இது பல்வேறு தேர்தல்களில் ஒரு வாக்குறுதியாகவும் மட்டும் இருக்கிறது.
பாலக்கோடு தொகுதியை பொறுத்தவரை சாதி அரசியல் பரவிக் கிடப்பதையும், வாக்குக்கு பணம் கொடுக்கும் போக்கு தற்போதும் தொடர்வதும் தொகுதி மக்கள் எடுத்துரைக்கின்றனர். பாலக்கோடு அரசினர் கலைக்கல்லூரி வந்திருக்கிறது என்பதைத் தவிர பொது எதிர்பார்ப்புகள் நிறைவேற வில்லை என்று தொகுதியின் குரலாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை என்ற ஒரு வார்த்தையின் மூலமாகவே இந்த தொகுதியை பற்றி சுருக்கி கூறிவிடலாம். பூக்கள் – தக்காளி – சாகுபடி என்று ஒருபுறம் நடைபெற்று இருந்தாலும் பல இடங்களிலும் விவசாய பணிகள் முடங்கிப் போய் இருப்பதாய் சரி செய்யவேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் வேண்டுகோள்.
விவசாயம் முடங்கி போய் இருக்க காரணம் தண்ணீர் பஞ்சம். நீர் பாசன திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாகும். இப்போதும் அது குறையாகவே இருக்கிறது. இந்த பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து 20 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சி மட்டும் நடைபெறுகிறது