தண்ணீர் விரதம் மேற்கொள்வதினால் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன.அவை என்னவென்று பார்ப்போம்.
தண்ணீர் விரதம், அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த நினைப்பவர்களுக்கு உதவி செய்யும். பொதுவாக, 24 இருந்து 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படும். மேலும் 3,7,14,21 நாட்களும் இந்த விரதம் இருக்கிறார்கள்.மாசத்தில் சில நாட்கள், வாரத்தில் ஒரு நாள், என எதுவும் உட்கொள்ளாமல் அநேகர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே குடிப்பவரும் சிலர் உண்டு. அதில் உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருந்து வருகிறார்கள்.
நாள் முழுக்க எதுவும் சாப்பிடாமல் தண்ணீரை மட்டும் குடிப்பதில் நன்மை,பக்கவிளைவு இரண்டும் இருக்கின்றன.தண்ணீர் விரதம் உடல்எடை குறைக்க, ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த உதவும்.மாசத்தில் ஒருநாள் தண்ணீர் விரதம் இருந்தால் அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை தருவது மட்டும்மின்றி இறந்த செல்களை புதுப்பித்து,உடம்பில் இருக்கும் நச்சுத்தன்மையை துரிதப்படுத்தும். இதனால் ஆரக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை அமையும்.
ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விரதம் மேற்கொள்வது ஆபத்தானது. இருந்தாலும் எதுவும் சாப்பிடாமல் இருபத்தினால் உடலில் உப்பு தன்மை சேர்வதை குறைத்து ரத்த அழுத்தத்தின் அளவு சீராகும்.தண்ணீர் விரதத்தை கடைப்பிடித்தால், உடலில் இருக்கும் டிரைகிளிசரைடு அளவு குறைக்கப்படும். இது நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவும். ஆரோக்கியமில்லா உணவுப் பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறையால் , உடம்பில் வீக்கம்,ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்றது.
தண்ணீர் விரதம் ஆரோக்கிய மிக்கதாயினும் , சில ஆபத்துகளும் இருக்கின்றது. விரதம் இருக்கையில் திட உணவுகள் எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளக்கூடும்.தண்ணீர் மட்டும் பருகிவந்தால் சிறுநீர் வெளிவரும் அளவு அதிகரித்து நீரிழப்பு ஏற்படும். உணவு உன்னாமல் இருந்தால் உடல் பலவீனமாக்கப்படுவதோடு,மூளைக்கு தேவையான ஆற்றல் குறைந்து, அதன் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆகவே மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே தண்ணீர் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.