Categories
உலக செய்திகள்

தந்தைக்கு இறுதி சடங்கு ரெடியானது…. அப்பா சாப்பிட்டு கொண்டிருக்கிறார்…. சொன்ன அதிர்ச்சியான தகவல்…!!

நபர் ஒருவர் இறந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் அவரது குடும்பத்திற்கு தவறான தகவல் தெரிவித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு திடீரென்று அந்த நபரின் குடும்பத்தாருக்கு மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் மருத்துவமனை ஊழியர்கள் உங்கள் தந்தை இறந்துவிட்டார். அவரை எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை என்ற அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர்.

இதனால் கவலையடைந்த குடும்பத்தினர் தன் தந்தை இறந்து விட்டதாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தந்தையை புதைப்பதற்காக இடுகாட்டு மையத்திற்கு போன் செய்து தகவல் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் இறுதிச்சடங்கு கூடத்தில் இருந்து இறந்தவரின் புகைப்படத்தை வீட்டுக்கு கொடுத்து அனுப்பி உள்ளனர். அதை பார்த்த குடும்பத்தினர் அது தன்னுடைய தந்தை இல்லை என்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு சென்று என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர் விசாரித்துள்ளனர். அப்போது மருத்துவமனையில் குளறுபடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. உயிரிழந்த கூறப்பட்ட நபர் காலை உணவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

மரணமடைந்தது வேறு ஒருவர் என்றும், தவறு நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த சம்பவம் குடும்பத்தாருக்கு முதலில் அதிர்ச்சியை கொடுத்தாலும் இப்போது தன் தந்தை இல்லை என்று தெரிந்தவுடன் நிம்மதியுடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |