கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்காடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேந்திரன் சிஜிமோள் தம்பதி. இவர்களுக்கு சுஷ்விகா மோள் என்ற 4 வயது பெண் குழந்தையும், சுஷ்வின்சிஜோ, சுஜிலின் ஜோ என்ற இரண்டு சிறுமிகளும் உள்ளனர்.
நேற்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுரேந்திரன், மனைவி மற்றும் குழந்தைகளை அடித்துள்ளார். இதில் பயந்த குழந்தைகள் அருகே இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் ஓடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 வயது குழந்தையான சுஷ்விஷா மோளை விஷபாம்பு ஒன்று கடித்துள்ளது.
இது குறித்து குழந்தைகள் அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.