Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தையர் தினத்தில் நதியா வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை நதியா தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நதியா. இதையடுத்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, ராஜகுமாரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இதன் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் .

https://twitter.com/ActressNadiya/status/1406460610775175170

தற்போது நடிகை நதியா திரிஷ்யம்-2 தெலுங்கு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நதியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘அப்பா, மகிழ்ச்சியான தந்தையர் தின வாழ்த்துக்கள். உங்களுடைய அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |