நடிகை ஸ்ருதிஹாசன் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அஜித், விஜய் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்துள்ளார்.
https://twitter.com/shrutihaasan/status/1406447861936443399
மேலும் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.