கர்நாடக மாநிலத்தில் பெற்றோடன்இருசக்கர வாகனத்தில் சென்ற 3வயது குழந்தை விபத்தில் உயிரிழந்தது .
குடகு மாவட்டம் பசவனகளி பகுதியைச் சேர்ந்த பரமேஷ் ,கீதா தம்பதியர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் .புஷால் நகரில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பரமேஷ் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென வலது புறமாக முன்னேறியுள்ளார் .இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்த பரமேஷ் ,கீதா தம்பதியினரின் 3வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது .