தந்தையின் கள்ளகாதலியை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள மருதுபாண்டியர் நகரில் பாகம்பிரியாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பாகம்பிரியாள் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாகம்பிரியாளுக்கும் வேந்தோணி அடுத்துள்ள அண்ணாநகரில் வசிக்கும் சேகர் என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து சேகர் குடும்பத்தில் இதுகுறித்து தெரியவந்த நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேகரின் மகன் சுப்பிரமணியன் பாகம்பிரியாள் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுப்பிரமணி மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து பாகம்பிரியாளை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுடியுள்ளார். இதில் பாகம்பிரியாள் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாகம்பிரியாளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாகம்பிரியாள் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமக்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பெண்ணை கொலை செய்த சுப்பிரமணியனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.