Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தையின் மரணம் … பிக்பாஸ் அனிதா வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!

பிக்பாஸ் அனிதா அவரது தந்தை மறைவுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4-வது சீசனில் கலந்துகொண்டவர் அனிதா சம்பத் ‌. இவர் கடந்த வார இறுதியில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார் . இன்று அனிதாவின் தந்தையும் பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான ஆர்.சி. சம்பத் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவால் அனிதா குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர் . தற்போது அனிதா வெளியிட்டுள்ள பதிவில் ,’என் தந்தை மதிப்பிற்குரிய ஆர்.சி.சம்பத் அவர்கள் திடீரென வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார் ‌. இன்னும் என்னால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை . பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைபடுத்தி கொள்ளும் முன்பாக கடைசியாக அவரைப் பார்த்தேன் . நான் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது அவர் இல்லை, ஷிரிடி சென்றிருந்தார் . அவரது போன் தொடர்புக்கு வெளியே இருந்ததால் அவரிடம் போனில் கூட பேச முடியவில்லை .

Bigg Boss Tamil 4 Anitha Sampath shares the real reason behind her father's  sudden demise

இன்று எட்டு மணிக்கு இந்த துயரமான சம்பவத்தைப் கேட்டேன் . அவர் உயிரோடு இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் . என்னால் நம்ப முடியவில்லை. அப்பா நீ வீட்டுக்கு வந்துரனும் .உன்கிட்ட நான் நிறைய பேசணும். உன் குரல் கேட்டு 100 நாள் மேல ஆச்சு . இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே எலிமினேட் ஆகி வந்து இருப்பேன் . விஜய் டிவி ஷோ திரும்ப வரும் ஆனா என் அப்பா திரும்ப வர மாட்டாரு . இந்த வாரம் நான் காப்பாற்றப்பட்டிருந்தால் கடைசியாக கூட என் அப்பாவை பார்த்திருக்க முடியாது . வாழ்க்கையை கணிக்க முடியவில்லை. எல்லாம் ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது . உங்கள் பெற்றோர்களை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங்கள் நான் அவரை இழந்து விட்டேன் . குற்ற உணர்ச்சியாக இருக்கிறது’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |