பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த 7 நாட்களே ஆன தனது குழந்தையை தந்தையே சுற்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாநிலத்தின் மியான்மார் பகுதியை சேர்ந்தவர் ஷாஷ்சாயிப் கான். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த கான் தனது மனைவி மற்றும் மகளை வசைபாடி வந்துள்ளார்.
இது தொடர்பாக பாத்திமா கூறுகையில். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் வந்தார். முதலில் என்னை கடுமையாக திட்டினார் பின்பு குழந்தையை சபித்தார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கியை எடுத்து குழந்தையை நோக்கி சுற்று விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் முதலில் இருந்தே எனது கணவர் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கூறி கொண்டே இருந்தார். ஆனால் அவர் இப்படி செய்வார் என்று யாருமே நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ஷாஷ்சாயிப் கானை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பிறந்த ஏழு நாட்களே ஆன தனது மகளை தந்தையே சுற்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.