Categories
தேசிய செய்திகள்

தந்தையுடன் உறவை விரும்பாத மகளுக்கு…. சொத்தில் எந்த உரிமையும் இல்லை….. உச்ச நீதிமன்றம் அதிரடி….!!!

தந்தையுடனான உறவை விரும்பாத மகளுக்கு அவரது பணத்தை கேட்பதற்கு உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுடெல்லியில் தந்தையுடன் சேர்ந்து வாழ விரும்பாத மகளுக்கு அவரிடமிருந்து செலவுக்கு பணம் பெறுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்எம் சுந்றேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் கணவர் மற்றும் மனைவி திரும்ப இணைந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாத நிலையில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. மேலும் கணவர் இறுதி மற்றும் முழு இழப்பீடாக மனைவிக்கு 10 லட்சத்தை 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தப்பட்டு ஒரு மாதத்துக்குள் மனைவி அந்த தொகையை கேட்காவிட்டால் அது நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு 91 நாட்களுக்கு பிறகு புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மகளின் கல்வி மற்றும் திருமண செலவுகள் குறித்து கவனத்தில் கொள்ளப் படுகின்றது. ஆனால் மகள் தந்தையுடன் எந்த உதவியும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருக்கு 20 வயது நடக்கிறது என்பதாலும் அவர் தந்தையிடமிருந்து கல்விக்காக எந்த உதவியும் கோரமுடியாது. அதேவேளையில் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |