Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தை…. ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு….திருச்சியில் பரபரப்பு…!!

ஆற்றில் மூழ்கி 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வேம்பனூர் கல்லு தோண்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய நிலா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அதன்பின் சுப்பிரமணி திடீரென கண்விழித்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அனைத்து இடங்களிலும் தனது குழந்தையை தேடி அலைந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் வேம்பனூர் வெள்ளாற்று பகுதிக்கு குழந்தை சென்றிருக்கலாம் என சுப்பிரமணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குழந்தையை தேடுவதற்காக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆற்றிலிருந்து குழந்தையை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்த நிலா ஸ்ரீ எப்படி ஆற்று பகுதிக்கு சென்றார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |