Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தையுடன் மீண்டும் கூட்டணி ….! நடிகர் ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’….!!!

நடிகர் ஜீவா தனது தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘வரலாறு முக்கியம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்.பி சவுத்ரி மகனான நடிகர் ஜீவா தனது தந்தை தயாரிப்பில் வெளியான ‘ஆசைஆசையாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பிறகு மீண்டும் தந்தை தயாரிப்பிலேயே ‘தித்திக்குதே’ படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களை தன் மகனுக்காக ஆர்பி சவுத்ரி தயாரித்தார். இதில் கடைசியாக ஜீவா நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தன் அப்பாவின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘வரலாறு முக்கியம்’ என்ற படத்தில் ஜீவா நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.

மேலும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த காஷ்மீரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக்,சரண்யா பொன்வண்ணன்,சாரா லொள்ளு சபா சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் சென்னை ,கோயம்புத்தூர், கேரளா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |