Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையை இழந்த வேதனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜ்குமார்(24) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ராஜா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் வயிற்று வலி மற்றும் தந்தை இறந்த துக்கத்தில் இருந்த ராஜ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |