Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்….. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சாவு….. பெரும் அதிர்ச்சி….!!!

கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அகரம் பேரூராட்சி டி. அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன்(63). இவரது மனைவி பாக்கியம். இந்த தம்பதிக்கு நந்தினி (24), சரவணகுமார் (20), சிவா (17) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் நந்தினிக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. தற்போது, இரண்டு மகன்களுடன் காளியப்பனும், அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் காளியப்பன் கஞ்சா போதையில் அடிக்கடி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று வழக்கம் போல் அவர் கஞ்சா போதையில் அவரது மனைவி பாக்கியம் மற்றும் மகன்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணக்குமார் கத்தியால் தனது தந்தையை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்து விரைந்த வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான போலீசார், தந்தையை கொலை செய்த மகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |