Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தையை கொடூரமாக கொலை செய்து டிரம்மில் போட்டு அடைத்து புதைத்த மகன்… கோர்ட்டில் சரண்… போலீஸ் விசாரணை….!!!!

தந்தையை கொலை செய்து உடலை டிரம்மில் போட்டு அடைத்து புதைத்த மகன் பூந்தமல்லி கோர்ட்டில் சரணடைந்தார்.

சென்னை, வளசரவாக்கம் ஆற்காடு ரோடு பகுதியில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி திடீரென்று காணாமல் போனார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குமரேசன் படுக்கை அறை முழுவதும் ரத்த கறை இருந்து  துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து குமரேசனின் மகள் காஞ்சனமாலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தந்தை குமரேசனை அவருடைய மகன் குணசேகரன் அடித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. அதன்பின் தந்தை உடலை டிரம்மில் போட்டு அடைத்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு உள்ள காலி இடத்தில் புதைத்துவிட்டு அவர் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து உதவி கமிஷனர் கலியன், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் தலைமையிலான 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குணசேகரனை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த குணசேகரன் நேற்று முன்தினம் பூந்தமல்லி கோர்ட்டில் சரணடைந்தார். அப்போது போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு மொட்டையடித்து மாறுவேடத்தில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கோர்ட்டில் சரணடைந்த குணசேகரனை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளார்கள். விசாரணைக்குப்பின் அவர் தந்தையை எதற்காக கொலை செய்தார் என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறினார்கள்.

Categories

Tech |