உருட்டுக்கட்டையால் மகனை தாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை விவசாயியான ராஜா(57) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ்(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ராஜாவை ரமேஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜா தனது மகனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த ரமேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.