Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற ராணுவ வீரர்…. திடீரென நடந்த விபரீதம்…. 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதி சடங்கு….!!!!

விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டணம்பட்டி கிராமத்தில் ராணுவ மையத்தில்  ஹவில்தாராக வேலை பார்க்கும்  சங்கிலிராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ஆம் தேதி பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பார்த்துவிட்டு மணப்பாறை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கிலிராயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கிலிராயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கடந்த 10-ஆம் தேதி சங்கிலிராயன்  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் உயிரிழந்த சங்கிலிராயனின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |