தந்தை இறந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் மகனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணா நகரில் 92 வயதான முதியவர் வடிவேல் வசித்து வந்துள்ளார். இவரது மகன் 38 வயதான நாராயண மூர்த்தி என்பவர். இந்நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உடனே மகன் நாராயணமூர்த்திக்கு தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு எதிர்பாராமல் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..