Categories
மாநில செய்திகள்

தந்தை இறுதி சடங்கு…. ஹெலிகாப்டரில் வந்த மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று, ஹெலிகாப்டரில் சென்ற அன்பு மகனுக்கு கிராம மக்களிடையே பாராட்டுக்கள் குவிகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவரக இருந்தவர்  சுப்பையா. இவரது மகன் சசிகுமார் திருப்பூரில், கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை நிமித்தமாக இந்தோனிசியா சென்றிருக்கிறார். இதையடுத்து கடந்த மாதம் 30-ஆம் தேதி தந்தை சுப்பையா உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார்.

இதை அறிந்த சசிகுமார் இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்தார். அதன் பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு நேற்று வந்தடைந்தார். தொடர்ந்து தென்னங்குடி க்கு சாலை வழியாக சென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதால் பெங்களூரில் இருந்து 5,00,000ரூபாய் வாடகைக்கு வாங்கிய தனியார் ஹெலிகாப்டர்கள் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தார். இதையடுத்து புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து காரில் சாலை வழியாக தென்னங்குடிக்கு சென்று தந்தையின் இறுதி சடங்கில் சசிகுமார் கலந்துகொண்டார்.

Categories

Tech |