நாமக்கல் மாவட்டத்தில் தந்தை கண்டித்ததில் மனமுடைந்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள குச்சிப்பாளையம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அமிர்தவர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அமிர்தவர்ஷினி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த அமிர்தவர்ஷினியின் தந்தை சிவராமன் மகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அமிர்தவர்ஷினி வீட்டிலிருந்த விஷ மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இரவு தூங்கச் சென்றுள்ளார்.
இதனையடுத்து காலையில் படுக்கையறையில் மயங்கிய நிலையில் இருந்த அமிர்தவர்ஷினியை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவராமன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனலிக்காமல் அமிர்தவர்ஷினி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.