மகேஷ் பாபுவின் தந்தையான பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தை மாரடைப்பால் இறந்த போதும் மகேஷின் சேவை நிற்கவில்லை. ஆம், கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட அதே நாளில், வேறொரு இதயத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மகேஷ் பாபு.
இதய ஓட்டையால் பாதிக்கப்பட்ட மோக்ஷித் சாய் என்னும் குழந்தைக்கு இவரது அறக்கட்டளை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு உயிரை இழந்த அதே நாளில் மற்றொரு தீபத்தை ஏற்றியிருக்கிறார் என்று மகேஷை நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்