Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தந்தை செய்து வந்த தொழில்”…. நஷ்டம் ஏற்பட்டதால் மகன் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மண்டபம் தெருவில் விவசாயியான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை நாராயணன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கடந்த ஒரு வருட காலமாக தந்தை செய்து வந்த விவசாய தொழிலை ஜெயச்சந்திரன் செய்து வந்துள்ளார். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜெயச்சந்திரன் கடன் தொந்தரவால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் கரும்புக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை தின்று ஜெயச்சந்திரன் வயலில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயச்சந்திரனின் மனைவி சங்கரேஸ்வரி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |