மகனை கத்தியால் குத்திய குற்றத்திற்காக தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்துள்ளார். இந்நிலையில் மாரியப்பனுக்கும் தர்மலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தர்மலிங்கம் தனது மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த மாரியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தர்மலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.