ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ் என்பவரும் அவரின் மகன் யுவராஜ் என்பவரும் வியாபாரம் நிமிர்த்தமாக 32 லட்சத்துடன் திருச்சியிலிருந்து பேருந்தில் ஊட்டிக்குச் சென்ற நான்காம் தேதி வந்துள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் குத்தி ஒன்பதாயிரம் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றார்கள். இதுகுறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ், 16 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் 32 லட்சம் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது.
இது குறித்து போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தது எட்டு பேருக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. மேலும் இதுப்பற்றி சுபாஷ் சந்திரபோஸ் கொடுத்த தகவலின் பேரில் மாதவன், நிதிஷ்குமார் உள்ளிட்ட இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தார்கள். அப்பொழுது 32 லட்சம் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக திருச்சியிலிருந்து பின்தொடர்ந்தது தெரிந்தது. இதில் நான்கு பேருக்கும் தொடர்பு இருந்தது உறுதியானது. இதை தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றார்கள்.