சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ் வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் என 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதில் முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் படி இரண்டு பேர் காவலருக்கு எதிராக சாட்சிகளாக மாறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே தலைமை பெண் காவலர் சாட்சியம் அளித்த நிலையில் மேலும் ஒரு காவலர்கள் காவல் நிலையத்தில் இரவு நடந்தது என்ன ? என்பது குறித்து முழுமையான சாட்சியளித்துள்ளனர்.இந்த அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்து இருக்கக்கூடிய சாட்சியங்களை அழிக்க முயற்சித்ததாகவும், கொலை வழக்கு போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமை பெண் காவலர் – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன ? என்பது குறித்து போலீசுக்கு எதிரான சாட்சியமாக மாறி இருக்கின்றார்கள்.
இது தொடர்பாக தற்போது தூத்துக்குடி சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், இரு காவலர்களிடம் விசாரணை நடைபெற்ற வருகின்றது. அவர்கள் இருவரையும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.