சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் டிஎஸ்பி பரத் ஆஜராகியுள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து 16 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து நேற்று தந்தை மகன் இறந்த குடும்பத்தினரிடம் திருச்செந்தூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையம் வந்து, சம்பவத்தன்று பணியில் இருந்த பெண் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தி அதன் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்துகொண்டார். மேலும் சம்பவத்தன்று தந்தை மகன் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற தனியார் வாகன ஓட்டையையும் சாத்தான்குளம் காவல் நிலையம் வரச்சொல்லி கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். இதே போல டிஎஸ்பி பாரத் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் முன்பு ஆஜராகி உள்ளார்.