தந்தை மகன் மரணம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயர்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி இருக்கிறது தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த நோட்டீஸ் வழங்கி இருக்கிறது. இதற்க்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் ஆகியோரும் விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.