சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு நீதி விசாரணை நடத்தி வருகின்றார்.
சாத்தான்குளத்த்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இருவரின் உயிரிழப்புக்கு காரணம் காவலர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இருவரின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்து.
தற்போது பிரேத பரிசோதனை கூடத்தில் உறவினர்களிடம் கடந்த மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் உறவினர்கள் தரப்பு வாதத்தை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வைத்தனர். மாஜிஸ்திரேட்டு இருவரது உடல்களும் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்று உடலில் உள்ள காயங்கள் குறித்து விசாரித்து வருகிறார். இதையடுத்து இவர் அறிக்கை தயார் செய்து, அதனை சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.