தந்தை மகனை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாடசாமி(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன்(20), ஆகாஷ்(20), நல்லமுத்து(55) ஆகிய 3 பேருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாடசாமி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது நல்லமுத்து, லட்சுமணன், ஆகாஷ் ஆகியோர் மாடசாமியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த பரமசிவனையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லட்சுமணன், ஆகாஷ், நல்லமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.