குற்றாலத்தில் தனியார் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தந்தை மகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தனியார் விடுதி ஒன்றில் தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் சென்ற பொழுது கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதனால் ஊழியர் வெளியே இருந்து சத்தம் கொடுத்தும் யாரும் வரவில்லை. இதை தொடர்ந்து ஊழியர் உள்ளே சென்று பார்த்த பொழுது தாய், தந்தை, மகள் என மூவரும் வாயில் நுரை தள்ளியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர், விடுதி நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தார்.
இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூன்று பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரிந்தது. இதில் தந்தை மகாலிங்கம், மகள் தனபிரியா உள்ளிட்ட இருவரும் உயிரிழந்த நிலையில் காமாட்சி மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனால் போலீசார் காமாட்சியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் மகாலிங்கம் மற்றும் தனபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.