ஊனமற்ற முதியவர் தனக்கான உரிமையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணித்தது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை அடுத்த ஏனாநல்லூரின் பகுதியில் வசித்து வரும் 73 வயதான நடேசன் என்பவர், விவசாயக் கூலி வேலையும் மற்றும் கோல மாவு விற்பதும் போன்ற சில வேலைகளை செய்து வாழ்க்கையை வழிநடத்தி வருகின்றார். மாற்றுத் திறனாளியான இவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் அவருடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வர வேண்டிய நிவாரணத்தை பெற சுமார் 60 – மைல் தூரம் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று எனக்கு இன்னும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை வழங்கவில்லை என்று கூறிய அவர் வட்டாட்சியரை பார்த்து மனுயளித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவரை போன்று உள்ள மாற்றுத் திறனாளிகளைக் கண்டு அவரவர் வீட்டிற்க்கே சென்று அரசு நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்பதே இவர்களுக்கு வெகு நாட்களான கோரிக்கையாக இருந்து வருகிறது.